உள்நாடு

கூறிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கிய 6 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கூறிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கிய 6 பேர் கைது

சிங்கள புத்தாண்டு தினத்தன்று மருதானை டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி வெட்டிய குற்றச்சாட்டில் பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த சுரேஷ் பாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான பஞ்சிகாவத்தை சுரேஷ் பாயிடம் கைக்குண்டு மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் என்பன காணப்பட்டன.

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுரேஷ் பாய் உட்பட சுமார் பன்னிரண்டு பேர் மருதானை டெக்னிக்கல் சந்திக்கு சென்றுள்ளனர்.

தாக்குதலின் விளைவாக, அந்த நபரின் கை மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் பல குற்றச்செயல்களுடன் முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் இருப்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை!

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

இரு பயணிகள் உயிரிழப்பு; கட்டுநாயக்கவில் தரையிரக்கம்