சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

(UTV|GAMPAHA)-நிட்டம்புவ, எல்லக்கல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபரை வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

பனாவல, தும்மலகொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் வலப்பனை, திம்புட்டுகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (10) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்

வடபே, திம்புட்டுகொட பகுதிஙய சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்