வகைப்படுத்தப்படாத

குவாத்தமாலா ஜனாதிபதி ஜெரூசலத்தை ஏற்றுக்கொண்டார்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீறி குவாத்தமாலா தமது இஸ்ரேல் தூதரகத்தை ஜெரூசலத்தில் நிறுவவதற்கு தீர்மானித்துள்ளது.

ஜெரூசலத்தில் தமது இஸ்ரேல் தூதரகத்தை அமைப்பதாக குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மோராலேஸ் அறிவித்துள்ளார்.

தமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி பெற்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு கொண்டுவர முயற்சிக்கும் கண்டன தீர்மானத்தின் காரணமாகவே குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மோராலேஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராகவும் குவாத்தமாலா வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Selena Gomez gives heartfelt speech at cousin’s wedding

අධිකරණ ඇමති සහ ශ්‍රී ලංකාවේ මාලදිවයින් තානාපති අතර හමුවක්.

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு