கிசு கிசு

குழப்ப விரும்பவில்லை – ஏமாறவும் தயாரில்லை

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சை நாம் குழப்பவும் விரும்பவில்லை. அதேவேளை, ஏமாறவும் தயாரில்லை. சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சில் பங்கேற்பதா என்பதை நாம் பரிசீலித்து முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையைக் காட்டமாக விமர்சித்துள்ள நிலையில், ஜனாதிபதியுடனான பேச்சுக்களில் கூட்டமைப்பு சர்வதேச மத்தியஸ்தத்துடன்தான் பங்கேற்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 18ஆம் திகதி ஆற்றிய கொள்கை விளக்க உரை நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளது. பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அவர் வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், அவர் தலைமையிலான அரசு எம்மைப் பேச்சு மேசைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால் அதில் நாம் பங்கேற்பதா அல்லது சர்வதேச மத்தியஸ்தத்துடன் பங்கேற்பதா என்று மிகவும் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுப்போம்.

ஏனெனில், இந்தக் கருமம் மிகவும் முக்கியமானது. நாம் எதனையும் குழப்பமும் விரும்பமாட்டோம்; அதேவேளை ஏமாறவும் தயாராக இருக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐபிஎல் தொடருக்காக தயாராகும் வேகப்பந்து வீச்சாளர்

கோட்டாபய சவாலுக்குரிய ஒரு வேட்பாளர் என்பது கசப்பான உண்மை – ஹர்ஷ

அனாதை பிணமும் அரசியல் பேசும் நிலையும்