கிசு கிசு

குழந்தை முன்னே.. திருமணம் பின்னே

(UTV |  நியூசிலாந்து) – நீண்ட காலமாக டிவி தொகுப்பாளரை காதலித்து குழந்தையும் பெற்றுக் கொண்ட நியூஸிலாந்து பிரதமருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

நியூஸிலாந்து நாட்டின் மிகவும் இளம் வயது பிரதமராக அறியப்படுபவர் 40 வயதான் ஜெசிந்தா ஆர்டன். இவருக்கும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கிளார்க் கைபோர்டு என்பவருக்கும் இடையே காதல் நீடித்து வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டனர்.

ஆனால் அதற்கு முன்னர் ஜெசிந்தா 2017ல் பிரதமராக பதவியேற்றபோதே அவர் கர்ப்பமாக இருந்தார். இப்போது இந்த ஜோடிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தில்தான் இந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அடுத்த சில மாதங்களுக்குள் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

“இன்றும் பொதுத்தேர்தல் நடந்தால் நாம் வெற்றி பெறுவோம்”

போலந்தை நாட்டைச் சேர்ந்த சிறுமியின் உருக்கமான கடிதம்…

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு