வகைப்படுத்தப்படாத

குழந்தையை மடியில் வைத்தபடி தேர்வு எழுதிய பல்கலைக்கழக மாணவி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு. அங்குள்ள பெண்களிடம் படிப்பறிவு மிகவும் குறைவு. எனவே அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.

இத்தகைய நாட்டில் குக்கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் படிப்புக்காக பல்கலைக் கழகத்தில் சேர நுழைவு தேர்வு எழுதினார். திருமணமான அவர் 3 குழந்தைகளின் தாய்.

அவரது பெயர் ஜகந்தாப் அகமதி. விவசாயி ஆன இவர் டாஸ்குந்தி மாகாணத்தை சேர்ந்தவர். இதில் விசே‌ஷம் என்னவென்றால் தேர்வு எழுதுவதற்கு பிறந்த தனது கைக்குழந்தையுடன் வந்து இருந்தார். தனது கிராமத்தில் இருந்து திலி நகருக்கு மலைப் பாதை வழியாக 2 மணி நேரம் நடந்து வந்தார். அங்கிருந்து 9 மணி நேரம் பஸ் பயணம் மூலம் காபூல் வந்து தேர்வு எழுதினார்.

அவருக்கான தேர்வு கட்டணத்தை ஆப்கானிஸ்தான் இளைஞர் சங்கத்தினர் உதவியுடன் செலுத்தினார். தேர்வு எழுதி கொண்டிருந்தபோது அவரது குழந்தை கிஷ்ரன் காது வலியால் அழுதது.

உடனே கைக்குழந்தையின் அழுகையை சமாதானப்படுத்தினார். பின்னர் அதிகாரி அனுமதியுடன் குழந்தையை தேர்வு அறைக்குள் கொண்டு வந்தவர் அதை மடியில் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்தபடி தேர்வு எழுதி முடித்தார்.

குழந்தையை மடியில் கட்டியபடி தனியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதிய அகமதியின் போட்டோவை பேராசிரியர் நசீர் கு‌ஷராவ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මෝදර මහවත්ත ප්‍රදේශයේ භූ ගත ඉන්ධන නළ එලීම අද සිට

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்…ஆசிரியர் அடித்துக்கொலை!

இன்று முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள்