உள்நாடு

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய, குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தி செய்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக , சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்தையில் தேங்காய் எண்ணெய் மாபியா

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்