கேளிக்கைசூடான செய்திகள் 1விளையாட்டு

குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் கொடுத்த கட்டாய அறிவுரை -என்ன?

(UTVNEWS | COLOMBO) – உலகக் கிண்ணஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் போட்டியிட்டன. இதில் நியூசிலாந்து அணி 241 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. அதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி, அதிக நான்கு ஒட்டங்களை எடுத்திருந்ததால் வெற்றிப் பெற்றது.

இது குறித்து நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஜிம்மி நீசம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குழந்தைகளே இனி நீங்கள் யாரும் விளையாட்டை உங்கள் துறையாக தேர்வு செய்ய வேண்டாம். பேக்கிங்கோ அல்லது வேறு துறையையோ தேர்ந்தெடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Kids, don’t take up sport. Take up baking or something. Die at 60 really fat and happy.

— Jimmy Neesham (@JimmyNeesh) July 15, 2019

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 17 நான்கு ஓட்டங்களை அடித்திருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி 26 நான்கு ஓட்டங்களை அடித்திருந்தது. நான்கு ஓட்டங்கள் அதிகம் அடித்ததால் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.

இந்த விதியை சுட்டிக் காட்டும் விதமாகவே ஜிம்மி நீசம் தோல்வியின் விரக்தியில் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசியின் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு