உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெண் கைதிகளின் குழந்தைகளின் நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என யுனிசெஃப் நிபந்தனை விதித்துள்ள போதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் ரம்புக்வெல்லவின் போக்குவரத்துக்கு இந்தப் பேருந்தை பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

ரம்புக்வெல்லவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனையோர் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ரம்புக்வெல்லவுக்கு ஏன் இவ்வாறான விசேட சலுகை வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்படுகிறது.

 

Related posts

எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் 11 ஆம் திகதி

ஊரடங்கு சட்டத்தை மீறிய 182 பேர் கைது

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்