உள்நாடு

குளியாட்டிய சம்பவம்: 18வயது காதலி கைது

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 18 வயதுடைய அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.

பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜூரியின் உலக அழகு ராணி மகுடம் கேட் ஷைண்டருக்கு

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் வரவேற்பு – தமிழீழ அரசாங்கம் அதிருப்தி.