வகைப்படுத்தப்படாத

குளவி கொட்டியதில் 7 பேர் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இலக்காகிய 07 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்தியபிரிவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த ஏழு பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியத்தில் 07பெண் தொழிலாளர்கள் பொகவந்தலாவ மாவட்டவைத்தியசாலையில் அனமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர்.

இந்த சம்பவம் 16.06.2017.வெள்ளிகிழமை காலை 11.30 மணி அளவில் இடம் பெற்றதாக தெறிவிக்கபடுகிறது.

11ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்களே இந்த அனர்த்ததிற்கு முகம் கொடுத்துள்ளதாக தெறிவிக்கபடுகிறது.

இதே வேலை குளவி கொட்டுக்கு இல்கான பெண் தொழிலாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன் வசதிகள் எதுவும் தோட்டநிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கவில்லையெனவும் பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெறிவித்தனர்.

நோட்டன்பரீஜ் நிருபர் இராமசநத்pரன்

Related posts

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

රුහුණු සරසවියේ වැල්ලමඩම පරිශ්‍රයේ සියලු පීඨ වසා දැමේ