சூடான செய்திகள் 1

குளம் உடைந்து நீரில் காணமல் போன அறுவர் மீட்பு

(UTV|COLOMBO)-குளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகேக்குளம் உடைந்ததில் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்திற்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குளம் உடைந்ததில் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் மேலும் மழை வீழ்ச்சி அதிகரித்தால் அந்ந ஊரே நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


முல்லைத்தீவு, குமுழுமுனை பகுதியில் குளம் உடைந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தவர்களில் 6 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர்.

 

 

 

Related posts

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை

சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்