அரசியல்உள்நாடு

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சில அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சுமார் 300 விசாரணை கோப்புகளை விரைவாக முடிப்பதில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் நாயகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஒரு விசேட புலனாய்வுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

அதன்படி, பாரியளவிலான ஊழல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அதன்படி, விரைவில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

Related posts

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

பிரித்தானியா தடை – அச்சப்பட வேண்டிய தேவை எனக்கில்லை – இந்த தடை என்னையும், என் அரசியலையும் பாதிக்காது – கருணா

editor

சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி