வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் வழிநடத்தப்படும் 15 குழுக்கள் பாதாள உலக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 15 குழுக்களில் சுமார் 9 குழுக்கள் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 52 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தக் கும்பல்களை சுமார் 1,400 பின்தொடர்பவர்களாக இருப்பதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சமீபத்தில் தெரிவித்தார்.
இந்தக் கும்பல்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் குறித்து பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 9 கும்பல்கள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்படுவது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணைகளின்படி, கணேமுல்லே சஞ்சீவ, ஹரக் கட்டா, குடு சலிந்து மற்றும் கரந்தெனியே சுத்தா ஆகிய குற்றக் கும்பல்கள் மிகவும் சுறுசுறுப்பாகி விட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.