(UTV | கொழும்பு) – நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.
குறித்த குறை நிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்து அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல் மற்றும் அதற்கு தேவையான ஏனைய விடயங்களை கொள்வனவு செய்வதற்காக இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)