கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய கடும் மழை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்திருந்த நிலையில் தற்போது அவை குறைவடைந்து வருவதாக மரக்கறி வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய மரக்கறிகளின் விலைகள் ;
போஞ்சி 1kg 335 ரூபாய்
கரட் 1kg 225 ரூபாய்
கோவா 1kg 135 ரூபாய்
தக்காளி 1kg 315 ரூபாய்
கத்தரிக்காய் 1kg 385 ரூபாய்
வட்டக்காய் 1kg 135 ரூபாய்
புடலங்காய் 1kg 125 ரூபாய்
பச்சை மிளகாய் 1kg 1050 ரூபாய்
தேசிக்காய் 1kg 205 ரூபாய்