வகைப்படுத்தப்படாத

குறைந்த விலையில் சுகாதாரமற்ற கோழி இறைச்சிகள்

(UTV|KILINOCHCHI)-தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கிடைக்கும் கோழி இறைச்சிகள் சுகாதாரமற்றவை என, பச்சிளைப்பள்ளி பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகம், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளது.

குறித்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் சுய தொழிலாக கோழி இறைச்சி விற்பனையை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவர்கள் கோழி வளர்ப்பினை உரிய, தரமான முறையில் மேற்கொள்வதில்லை எனவும், மிகக் குறைந்த விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்வதாகவும், பச்சிளைப்பள்ளி பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, கிளிநொச்சியிலுள்ள கோழி வளர்ப்பாளர்கள் சங்கத்தினால், சில மாதங்களுக்கு முன்னர் அம் மாவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற கோழி இறைச்சிகள் குறைத்த விலைக்கு விற்பனை செய்பவர்கள் தமது மாவட்டத்தில் உள்ளதாகவும், அவர்களால் தமது வர்த்தகத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர்.

தாம் ஒருகிலோ கோழி இறைச்சியை 550 ரூபாவுக்கு விற்பனை செய்கையில், சிலர் 400 ரூபாவுக்கு வழங்குவதாகவும் இது குறித்து விசாரணை செய்யுமாறும் அவர்கள் அக் கடிதத்தில் கோரினர்.

இதனையடுத்து, மாவட்ட செயலாளர் இந்த விடயம் குறித்து ஆராயுமாறு கிளிநொச்சி சுகாதார சேவைகள் அதிகாரிகாரிக்கு தெரியப்படுத்தினார்.

இதன்படி, பொதுச் சுகாதார பரிசோதரகர்களை அனுப்பி விசாரித்த போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு, அமைப்பொன்றினால், இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டதாகவும், எனவே 228 குடும்பங்கள் இவ்வாறு கோழி வளர்ப்பை  மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்தது.

இவர்கள் கோழிக்கான உணவையும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்கின்றமையால் குறைந்த விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் அவர்கள் கோழி வளர்ப்பை முறையாக மேற்கொள்ளாமையால் குறித்த இறைச்சிகள் சுகாதாரமற்றவை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசாங்கத்தின் 4 முக்கிய பதவிகளில் மாற்றம்

Ceylon Tea global promotional campaign to kick-start in Russia

சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி?