சூடான செய்திகள் 1

குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை

(UTV|COLOMBO)-இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததையடுத்து, லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், உயர்த்தப்பட்ட எரிபொருளின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று காணப்பட்ட விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி,
ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவுக்கும்,
ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 148 ரூபாவுக்கும்,
டீசல் லீற்றர் ஒன்றின் விலை109 ரூபாவுக்கும்,
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 119 ரூபாவுக்கும்
விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் குறித்த உத்தரவை முன்னிட்டு வாகன சாரதிகள் உட்பட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

யாழில் பதிவாகிய பல தாக்குதல் சம்பவங்கள்

2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor

கம்பெரலிய கிராம அபிவிருத்தி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்