உள்நாடு

‘குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாரில்லை’ – அனுரகுமார

(UTV | கொழும்பு) – குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கத் தயாரில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ச முகாமை இணைந்து அரசாங்கத்தை அமைக்க அழைப்பது மற்றும் அதற்கு பங்களிப்பது அனைத்துக் கட்சி அரசாங்கம் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் எப்போது அமையும் என அறிவிக்கப்படவில்லை எனவும் கடந்த காலங்களில் உச்ச தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பலர் முன்வைத்த பிரேரணைகளில் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பு, அந்த அரசாங்கத்தின் வகிபாகம், இடைக்கால அரசாங்கம் எவ்வளவு காலம் மட்டுப்படுத்தப்படும் என்பதை ஜனாதிபதி தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Related posts

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு – லிட்ரோ

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு