உள்நாடு

குறிஞ்சாக்கேணி விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மரணித்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு

சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகள் – ஆறு பேர் கைது

editor

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு