வணிகம்

குருநாகல் மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டம்

(UTV|KURUNEGALA)-குருநாகல் மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீடமைப்புத் திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த வீட்டு வசதியற்றவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.

 

25 வீடுகளை உள்ளடக்கிய 40 வீடமைப்பு திட்டங்கள் இதன் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

அரச மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான கடன் திட்டத்தின் கீழ் ஐந்து இலட்சம் ரூபாவும், வறிய குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபா உதவித் திட்டத்தின் கீழும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாளை முதல் நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு