சூடான செய்திகள் 1

குருணாகல் பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி இல்லை – பொன்சேகா

குருணாகல் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியாக இருப்பின் அது கட்சியின் ஆசீர்வாதத்துடன் நடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்கத்தை பாதுகாக்க முடியாத நபர்களால் கட்சிக்கும் நாட்டிற்கும் எவ்வித நல்லதும் நடக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Related posts

பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

விசேட செயலணியின் கூட்டத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள்