உள்நாடு

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

குரங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் அழிவை நிவர்த்தி செய்யும் வகையில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி வேலைத்திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பமாகிறது.

பல கால்நடை மருத்துவர்களின் ஆதரவைப் பெற்ற இந்தத் திட்டத்திற்கு விவசாய அமைச்சு ரூ. 4.5 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

குரங்குகள் கிரிதலேயில் உள்ள வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவை கருத்தடை செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்படும்.

விவசாய அமைச்சு இத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது.

இதேவேளை, பயிர்களை அழிக்கும் குரங்குகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அண்மையில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கமளித்த விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த, இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மட்டுமே தாம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.

குரங்குகள் கொல்லப்படுவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருவதாகக் கூறிய அமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது மட்டுமே தனது நோக்கமாகும் என்றார்.

“சுற்றுச்சூழலியலாளர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டது நல்லது என்று நான் நினைக்கிறேன். இது தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணினேன். தற்போது பல்வேறு தரப்புகளின் தலையீடு இதை சாதித்துள்ளது.

விரைவில் தீர்வைக் காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Related posts

குரல்பதிவுகள் வெளியானமை தொடர்பில் அறிக்கை

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க தொலைபேசி எண் அறிமுகம்