சூடான செய்திகள் 1

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 07ம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு இன்று (02) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதிதலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பெற்றுக்கொண்ட கபீர் மற்றும் ஹலீம்

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…