வகைப்படுத்தப்படாத

குப்பைகளை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வௌியீடு

(UDHAYAM, COLOMBO) – குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என்று வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுடன் இந்த உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக் பிரிவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எந்த ஒரு உள்ளுராட்சி மன்றத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படகின்ற குப்பைகளை அகற்றுதல், கொண்டு செல்லுதல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், செயன்முறைப்படுத்தல் உள்ளிட்ட கடமைகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்த கடமையில் இருந்து விலகுதல், அழுத்தம் கொடுத்தல், மக்களை துண்டிவிடும் வகையில் செயற்படுதல் போன்ற செயற்பாடுகளுடன், அத்தியாவசிய கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயற்படுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த விதிமுறைகளை மீறும் நபர்களை பிடியாணை இன்றி கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி கடூழிய சிறை தண்டனை வழங்க இடமளிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸிம்பாப்வே தேர்தல்: படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Former Defence Secretary, IGP admitted to hospital

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி