உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (01) வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 811 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1633 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் நிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை கப்பல் சேவை

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?

மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்