உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (26) வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 460 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1182 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மேலும் 298 பேர் வெளியேற்றம்

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ