சூடான செய்திகள் 1

‘குடுசுத்தி’ என்ற பெண் மீண்டும் கைது…

(UTV|COLOMBO)-போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை காவற்துறையால் கைது செய்யப்பட்டிருந்த போது தப்பிச் சென்ற ‘குடுசுத்தி’ என்ற பெண் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவை – கலுபே பிரதேசத்தில் வைத்து 40 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

கடந்த மாதம் 29ம் திகதி ஹிக்கடுவை காவற்துறையால் கைது செய்யப்பட்ட இவர் , நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவிருந்த நிலையில் , நீர் அருந்த செல்வதாக கூறி தப்பிச்சென்றிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை காவற்துறையின் காவற்துறை பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபில்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன செப்டம்பர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்