உள்நாடு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் இன்று (19)  அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு முன் பதிவு இன்றி அதிக எண்ணிக்கையானோர்  வருகை தந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக குடிவரவு –  குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இன்று முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும் குடிவரவுத் திணைக்களத்துக்கு வருவதற்கு முன்னர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Related posts

மல்வத்து அஸ்கிரி பீடாதிபதியின் விசேட அறிக்கை

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நயன!

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி