உள்நாடுவணிகம்

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை

(UTV | கொழும்பு) – குடிநீர் போத்தல் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள், அவர்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு லீட்டர் போத்தலுக்கு பொருத்தமான கட்டணத்தை, அரசாங்கத்துக்கு அறவிட வேண்டும் என, நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“.. குடிநீர் போத்தல்களை விநியோகிக்கும் வர்த்தகர்கள், பாரியளவில் இலாபங்களைப் பெறுவதாகவும், அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மிகக் குறைந்த அளவு நிதியே கிடைக்கிறது.

குடிநீர் போத்தல் வர்த்த நடவடிக்கை, தற்போது பாரியளவு வர்த்தகமாக மாறியுள்ளது, அது தற்போது ஏற்றுமதி நடவடிக்கை வரை வளர்ச்சியடைந்துள்ளது.எனவே, இந்தத் துறைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவையும், நிலத்தடி நீர் வளங்களின் தாக்கத்தையும் கண்காணிக்க வேண்டும்.

அத்துடன், இந்தத் துறையில் ஈடுபடும் வர்த்தகர்கள், ஒரு லீட்டர் குடிநீர் போத்தலின் ஊடாக, பாரிய வருமானத்தைப் பெறுகின்ற போதிலும், அரசாங்கத்துக்கு ஐந்து சதம் ரூபாயே செலுத்துகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு லீட்டர் போத்தலுக்கு பொருத்தமான கட்டணத்தை அறவிட வேண்டும்..” என, வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் சற்று நேரத்தில்

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று