வகைப்படுத்தப்படாத

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்…

(UTV|INDIA) இன்று (13) அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயலானது குஜராத் கரையைக் கடக்கவுள்ள நிலையில் அரச அமைப்புக்கள் உடனுக்குடன் தரும் தகவல்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்படி அரபிக்கடலின் தென்கிழக்காக உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறி, தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் புயலானது நாளைய தினம் போர்பந்தர் மற்றும் விராவல் ஆகிய பகுதிகளூடாகக் கரையைக் கடக்கவுள்ளதுடன் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 155 கிலோமீற்றராக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதி மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அத்துடன், மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமது அரசு முன்னெடுத்துள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.

மேற்படி  பொதுமக்கள் சுய பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Related posts

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

A police operation to nab Beliatta chairman