விளையாட்டு

குசல் மெண்டிஸ் தனது 06 வது சத்தைப் பதிவு செய்தார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 79 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களைப் பெற்று 296 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சற்று முன்னர் வரை 03 விக்கட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை சார்பாக குசல் மெண்டிஸ் 106 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது 06 வது சத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

மிதாலி ராஜ் சாதனை

டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா விலகல்

இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று