விளையாட்டு

குசல் – பினுர வாய்ப்பினை இழந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா, இந்தியாவுடனான எதிர்வரும் தொடர்களில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அவரது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் குறித்த தொடர்களில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி போட்டிகளின்போது, ஏற்பட்ட இந்த உபாதை காரணமாக அவருக்கு ஓய்வில் இருக்கவேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, இந்தியாவுடனான ஒருநாள் போட்டித்தொடரில் இடம்பெறமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை விடுத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டிகளின்போது, இடது கணுக்காலில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

எனினும், இந்தியாவுடனான இருபது20 தொடரில் அவர் அணியில் இணைந்துக்கொள்ள முடியுமானதாக இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

காமன்வெல்த் 2022: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை