விளையாட்டு

குசல் ஜனித் பெரேரா போட்டிகளில் இருந்து நீக்கம்…

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது குசல் ஜனித் பெரேராவின் இடது தொடையில் உபாதை ஏற்பட்ட நிலையில் , அவர் நேற்றைய போட்டியில் துடுப்பெடுத்தாடவில்லை.

இந்நிலையில் , குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக மாற்று வீரரொருவரை தென்னாபிரிக்காவிற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

T20 உலகக் கிண்ணத்திற்காக சிங்கங்கள் நாட்டிலிருந்து வெளியேறினர்

மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்