உள்நாடு

‘கீழ்த்தரமான ஊடகப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சு கரட்டுகளை சாப்பிடத் தயாரில்லை என்றும் நாட்டுக்காக கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல காரியங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றக் குழு அமைப்பு மூலம் மாத்திரம் ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் பெரும் சோகத்திலும், அசௌகரியத்திலும் உள்ள வேளையில், ஊடகத்துறையில் இருக்கும் ஒரு சிறு தரப்பால் போலிச் செய்திகளைத் தயாரித்து, பத்திரிகைகளிலும், மறுநாள் பத்திரிகை செய்தியை வாசிக்கும் நிகழ்ச்சிகளிலும் படித்து, மக்களுக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி பற்றிய தவறான கருத்துக்களை பகிர முயற்சிப்பதாகவும், அதனூடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினர் அதிகார மோக அரசியல் பயணத்தை மேற்கொள்வது போன்ற தவறான செய்திகளை உருவாக்குவதாகவும் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அவர் தெரிவித்தார்.

1% சேறுபூசும் ஊடகங்கள் செய்யும் சதிகளில் மக்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் சிலர் காக்கைகளுடன் சேர்ந்து சதி செய்து பல்வேறு வதந்திகளை காக்கை இணையதளங்களில் நிறுவி நாட்டின் சாமானிய மக்களை தவறாக வழிநடத்துவதாகவும்,
நாகபாம்பு வெளிப்பட்ட போலி ஊடக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாகை ஊடகத்திட்டத்தின் ஊடாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது களனி ரஜமஹா விகாரையையும், பௌத்த சாசனத்தையும் அற்ப அரசியல் ஏலத்தில் விட்டு அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக சுமார் 70 அமைச்சுப் பதவிகளை கைக்கூலிகளுக்கு பகிர்ந்தளிக்கும் சூதாட்டத்தில் நாம் பங்கு கொள்ள மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை