வகைப்படுத்தப்படாத

கிழக்கு, வவுனியா, ஊவா மாவட்டங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் .

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ,சப்ரகமுவ ,தெற்கு, மத்தி மற்றும் வடமேல் மாகாணங்களில் இக்காலப்பகுதியில் மழை பெய்யக்கூடும்.

கொழும்பு ,களுத்துறை ,கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் பிற்பகலுக்கு பின்னர் பெய்யக்கூடும் . சுமார் 50 கிலோமீற்றர் வேகத்துடனான காற்றையும் எதிர்பார்க்கமுடியும்.

குறித்த காலநிலை நாளை 2ம் திகதிக்கான காலநிலை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08

சுஷ்மா , ரவி சந்திப்பு

ලක්ෂ 82ක් වටිනා මැණික් ගල් සොරා ගත් පුද්ගලයෙකු අත්අඩංගුවට