(UTV | கொழும்பு) –
பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல்.கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்நியமனம் இன்று வழங்கிவைக்கப்பட்டது. கிழக்கின் பல்வேறு சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான நூருல் ஹுதா, ஆய்வு, விமர்சன, விவரண தொடர் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வரும் ஒருவராவார்.
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர், கிழக்கு மாகாண கணனி தொடர்பாடல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர், சிலோன் மீடியா போரம் பொருளாளர் பதவிகள் உட்பட பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதானியாகவும், முக்கிய பதவி நிலை உத்தியோகத்தராகவும் இருந்து வரும் இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்கிறார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්