அரசியல்உள்நாடு

கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை சாணக்கியன் ஜனாதிபதியிடம் நேரடிக் கோரிக்கை

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் வகையில் என்ற வகையில் கலந்து கொண்ட சாணக்கியன் மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.

அதன் அடிப்படையில்,

மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார்.

அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

இன்றைய வானிலை (Weather Update)

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

சந்திமால் – பியூமி ஆகியோருக்கு பிணை [UPDATE]