உள்நாடுசூடான செய்திகள் 1

“கிழக்கிலிருந்து சிங்கள மக்களை விரட்ட திட்டம்” அம்பிட்டிய தேரர்

கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு (Batticoloa) மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பொறுப்புடன் செயல்படுவதாகவும், அவர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு சென்றுள்ளார், இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பல நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

எனினும், அவரது திட்டங்களில் விகாரைகள் உள்ளடக்கப்படவில்லை, அத்துடன் மட்டக்களப்பில் உள்ள முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுக்கவும் அவர் திட்டமிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

வெற்றி தோல்விகள் நிரந்தரமானவை அல்ல – எஸ்.எம். மரிக்கார்

editor