உள்நாடு

ஐந்து பீடை கொல்லிகளுக்கான தடை தொடர்ந்தும் அமுலில்

(UTV | கொழும்பு) – கிளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை தடை செய்யும் வர்த்தமானியை இரத்து செய்யும் வகையில் நேற்றிரவு அதிவிசேட வர்த்தமானி ஒன்று வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வர்த்தமானி வௌியிட்டமை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்திருந்தார்.

அத்துடன், பீடைக்கொல்லி பதிவாளர் பதவியிலிருந்து கலாநிதி ஜே.ஏ.சுமித் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

   

Related posts

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

Yuan Wang 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்