உள்நாடு

கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை நீக்கம்

(UTV | கொழும்பு) – களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானியின் கையெழுத்திட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் ரப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் 100 சதவிகித இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021 ஆம் ஆண்டில் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது.

Related posts

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் – பிரதமர் ஹரிணி

editor

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்