வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – பசுமையான மற்றும் தூய்மையான  சுற்றுச் சூழலைக்கொண்ட பாடசாலையாக கடந்த 2015,2016 ஆண்டுகளில்  ஜனாதிபதி தேசிய விருதான சுக சர தக்சலாவ  விருதினை இரண்டு தடவை கிளிநொச்சி அம்பாள்குளம விவேகானந்த வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

இரண்டு தடவைகள் இவ்விருதினை பெற்றுக்கொண்ட  அமபாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் 2017 ஆம் ஆண்டுக்கான  சுற்றாடல் தகவல் நிலையம்  ஆரம்பிப்பதற்கான தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாகவும் காணப்படுகிறது.

ஒவ்வவொரு ஆண்டும் தேசிய ரீதியில் ஜந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக  சுற்றாடல் தகவல் நிலையம்  ஆரம்பிப்பது வழக்கமாகும் அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் தகவல் நிலையம் அமை்பபதற்கான தேசியரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜந்து பாடசாலைகளில்  ஒரேயொரு தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய நான்கு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகளாகும்.

இதற்கான நிகழ்வு கடந்த முப்பதாம் திகதி பாடசாலையில் இடம்பெற்றது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளா் நாயகம் கலந்துகொண்டு சுற்றாடல் தகவல் நிலையத்தை தொடப்பி வைத்ததோடு மூன்று இலட்சம் ரூபா  பெறுமதியான நூலகளும் நூலக உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ்.என்.நிபோஜன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-1-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-2-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-3-1.jpg”]

Related posts

Dayasiri appears before PSC

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி

இன்று சில பகுதிகளில் 9 மணிநேரம் நீர் வெட்டு