உள்நாடு

கிளிநொச்சி மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

(UTV |  கிளிநொச்சி) – கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பளை , இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாத்திலிருந்து பளை பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தில் நேருக்கு நேர் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த 38 வயதுடைய தந்தை, 14 மற்றும் 11 வயதுடைய அவருடைய பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

editor