வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சில் கனரக வாகனங்கள் இரண்டு விபத்து இருவர் வைத்தியசாலையில் போக்குவரத்து தடை – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள்  நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து  பரந்தன்  நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  லொறி இரக வாகனமும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டதனாலையே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிசார்  தெரிவிக்கின்றனர்  டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளரும் லொறி இரக வாகனத்தின் சாரதியுமே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்து உள்ளமையால் வீதியில் இருந்து  அகற்றப் படாமையால் இன்று அதிகாலை இரண்டு மணிவரை ஏ 32  முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படுள்ளது  இவ்வாகனங்களை அகற்றுவதற்கு பாரம்தூக்கி  அல்லது யே .சி .பி இரக வாகனம் தேவைப்படுவதால் சில வேளைகளில் இன்று காலை வரை ஏ 32  முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படலாம்  என சந்தேகிக்கப்படுகின்றது

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

எஸ்.என்.நிபோஜன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-14.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-4-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-5-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-8.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-9.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-10.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-11.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-12.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/unnamed-13.jpg”]

Related posts

CID obtains 9-hour long statement from Hemasiri

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அதிருப்தி

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை