உள்நாடு

கிளிநொச்சியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|கிளிநொச்சி) – கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனை செய்த போது, 5 இலட்சத்திற்கு அதிக பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப் பொருளும் ஜிபிஎஸ் கருவி கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரான வாகன சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான வாகனமும் மற்றும் சாரதியும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

editor

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

editor