அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின், இந்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் கடந்த சனிக்கிழமை 18.01.2025, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர்கள், நைத்து திறந்து வைத்தனர்.

இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு பொருந்தோட்ட பிரதேசங்களில் உட்பட சகல மாவட்டங்களிலும் வீடமைப்பு மாதிரிக் கிராமங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி திறந்து வைத்த மாதிரி கிராமத்தில் 24 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

-அஷ்ரப் ஏ சமத்

Related posts

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor

என்.ஜி. வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!