உள்நாடு

கிளப் வசந்த கொலை – 21 வயதான யுவதி கைது – 48 மணி நேரம் தடுப்பு காவலில்

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று (21) கடுவலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு பதில் நீதவான் அனுமதித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு உதவியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்