உள்நாடு

கிறிஸ்மஸ் தினமன்று சிறைக் கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) –  கிறிஸ்மஸ் தினத்தன்று சிறைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு சென்று அவர்களைப் பார்வையிட இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழமையாக கிறிஸ்மஸ் தினத்தன்று சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட போதிலும், தற்போதுள்ள கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இம்முறை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் சிறைச்சாலைகளில் 3,279 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 2,584 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர். இதில் 1,189 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுள் 114 சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளனர். இவர்களுள் 73 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

மழையுடனான காலநிலை தொடர்ந்தும்

ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – சுசில் பிரேமஜயந்த

editor