உலகம்

கிர்கிஸ்தான் தேர்தல் மோசடியும் பாராளுமன்ற முற்றுகையும்

(UTV | கிர்கிஸ்தான்) – மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் (Kyrgyzstan) தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிர்கிஸ்தானில் கடந்த 3ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் 98.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

120 ஆசனங்களில் 61 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெறவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், காகிதங்களை கிழித்தெறியும் காட்சி மற்றும் அலுவலகத்தின் மற்றைய பகுதிகளில் தீ பரவியுள்ள காட்சிகளும் வௌியாகியுள்ளன.

போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இளவரசர் பிலிப் காலமானார்

இந்தியாவின் தேசபக்தராக மோடியை வர்ணிக்கும் புதின்

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு