உள்நாடு

கிரேன்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது

கிரேன்ட்பாஸ் நாகலகம் வீதி பகுதியில் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி இரவு நேரத்தில், கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகலகம் வீதி பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இரண்டு பேரை நோக்கி இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 32 வயதுடைய கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த குற்றச் செயலுக்கு ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆண் சந்தேக நபர்களும் மற்றும் பெண் சந்தேக நபர் ஒருவரும் இதுவரை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்த ஜனாதிபதி புலைமைப்பரிசில்!

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்